நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர். தற்போது இவர் டீசல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். விரைவில் படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று அவரது புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, புதுமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். இவர் நெஞ்சுக்கு நீதி படத்தின் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு ‛லப்பர் பந்து' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சான் ரோல்டன் இசையமைக்கிறார் என கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டை தொடர்புபடுத்தி இந்தப்படம் உருவாகும் என தெரிகிறது.