நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

காமெடி, ஹீரோ, குணச்சித்ரம் என பயணித்து வருகிறார் யோகி பாபு. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தாலும் இடையே நாயகனாகவும் நடிக்கிறார். அந்தவகையில் தற்போது "ஐகோர்ட் மகாராஜா" என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கிறார். திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார். பிரிடா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும் கிருஷ்ண வாகா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். சாண்டி இசையமைக்கிறார். மதுசுதனன், சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் என இப்படத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் நடிக்கின்றனர். காமெடி கலந்த படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வையை வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.