500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
1990களில் முன்னணியில் இருந்தவர் இசை அமைப்பளார் வித்யாசகர். தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தூள், கில்லி, சந்திரமுகி, பூவெல்லாம் உன்வாசம் போன்ற காலத்தால் அழியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர். சமீபகாலமாக அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. தற்போது 'உயிர் தமிழுக்கு' என்ற படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் வித்யாசாகர் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறார். முதல்கட்டமாக சென்னை மற்றும் கொச்சின் நகரங்களில் நடக்கிறது. இதில் அவர் இசை அமைத்த படங்களில் இருந்து பாடல்கள் இசைக்கப்படுகிறது. தனது இசை பயணத்தின் முக்கியமான நிகழ்வுகளையும் அவர் வெளிப்படுத்த இருக்கிறார். நிகழ்ச்சி நடக்கும் இடம், தேதி பின்னர் அறிவிக்கிறார்கள். இதற்கான ஒத்திகையை தற்போது தொடங்கி உள்ளார் வித்யாசாகர்.