Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிசிஎல் கிரிக்கெட்: தமிழ் ஹீரோக்களுக்கு மீண்டும் ஆப்பு

24 பிப், 2013 - 11:07 IST
எழுத்தின் அளவு:

சிசிஎல் எனப்படும் நடத்திர கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள திரைப்பட நட்சத்திரங்கள் மொழிவாரியாக பிரிந்து மோதி வருகிறார்கள். இது மூன்றாவது ஆண்டாக நடக்கும் போட்டி. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் சென்னை ரைய்னோஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால் இந்த ஆண்டு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

தற்போது நடந்து வரும் லீக் போட்டிகளில் முதலில் சென்னை அணி, போஜ்புரி அணியை கொச்சியில் எதிர்கொண்டு தோல்வியை சந்தித்தது. அடுத்து ஐதராபாத்தில் நடந்த போட்டியில் கர்நாடக புல்டோசருடன் மோதியது. இந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது. இப்படி மழை தந்த ஒரு புள்ளிதான் சென்னை அணியின் கைவசம் உள்ளது.

இந்த நிலையில் சென்னை ரைய்னோஸ் அணி மும்பை ஹோர்சஸ் அணியுடன் மோதியது. துபாயில் நேற்று (பிப் 23) இரவு இந்திய நேரப்படி 8.30 மணிக்கு போட்டி துவங்கியது. டாஸை வென்ற மும்பை அணி பேட் செய்தது. துவக்கத்திலிருந்தே அடித்து ஆடினார்கள் அந்த அணி வீரர்கள். ராஜா பர்வானி 50 ரன்களும், அப்தாப் சிவ்தசானி 70 ரன்களும் அதிகபட்சமாக எடுக்க, மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அடுத்து களம் இறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய அப்துல்லா கான் மூன்று பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த விஷ்னுவும், களத்தில் நின்ற விக்ராந்தும் அடித்து ஆடினார்கள். இதில் விக்ராந்த் 58 ரன்களும், விஷ்ணு 56 ரன்களும் எடுத்து அணியின் மானத்தை காப்பாற்றினார்கள். இவர்களுக்கு பிறகு வந்தவர்களில் பிருத்வி 16 ரன்கள் எடுத்தார் கேப்டன் விஷால் 9 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சாந்தனு 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜீவா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், என்றாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.

சென்னை அணி ஒரு புள்ளிகளுடன் களத்தில் இருக்கிறது. கர்நாடகா புல்டோசர், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி டபாங்ஸ் அணிகள் 4 முதல் 6 புள்ளிகள் வரை பெற்று முன்னணியில் உள்ளது. இப்போதுள்ள நிலைவரப்படி சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தமிழ் ஹீரோக்களுக்கு தொடர்ந்து விழும் ஆப்புகளால் சென்னை அணியினர் சோர்ந்து போய் இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

vallaboy - colifornia,யூ.எஸ்.ஏ
03 நவ, 2013 - 06:33 Report Abuse
vallaboy ஒபனிங் பேட்டிங் என்று பார்த்தால் கருவாயன் தான்.6.2 இ கேப்டன் க்கு
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
25 பிப், 2013 - 19:17 Report Abuse
Angry ஜெய் விஷால் தேவையே இல்லை , அதுக்கு பதிலா அப்புகுட்டினு ஒரு குள்ள நடிகர் இருக்காரு , அவரை கேப்டன் ஆக்கலாம் .....
Rate this:
syed ibra - tamilnadu  ( Posted via: Dinamalar Android App )
25 பிப், 2013 - 08:30 Report Abuse
syed ibra விளையாட்டில இதெல்லாம் சாதாரணமப்பா
Rate this:
senthil kumar - Riyadh,சவுதி அரேபியா
24 பிப், 2013 - 14:07 Report Abuse
senthil kumar அந்த கருவாயன் விஷால் எல்லாம் ஒரு கேப்டனா? செலேபரிட்டி என்று ஒரு தெரிஞ்ச மூஞ்சியும் எல்லா. இதல்லாம் செலிப்ரிட்டி கிரிக்கெட்??????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in