நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து எச்.வினோத், பா.ரஞ்சித் ஆகியோரின் டைரக்சனில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். இயக்குனர் பாரதிராஜா தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். 16 வயதினிலே படத்திலிருந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாக இவர்கள் இருவரின் நட்பு தொடர்பு வருகிறது. குறிப்பாக கமலின் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையில் பாலச்சந்தருக்கு அடுத்ததாக குறிப்பிடத்தக்க வெற்றி படங்களை கொடுத்தவர் பாரதிராஜா.
அந்த வகையில் இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து சினிமா குறித்த புதிய விஷயங்களை பரிமாறிக் கொள்வது உண்டு. தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் பாரதிராஜா, கமல் இருவரும் சந்தித்து சமீபத்தில் உரையாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார் கமல்.
இந்த சந்திப்பு குறித்து அவர் கூறும்போது, “மூன்று வழக்குரைஞர்கள்.. ஒரு மணப்பெண். 'சினிமா'. திரு பாரதிராஜாவும் நானும்.. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் என் முன்னே மூவியாலாவும் பின்னணியில் மறைந்த திரு ஆனந்து அவர்களும். இருவருமே சினிமா குறித்து எனக்கு நிறைய கற்பித்தவர்கள்” என்று கூறியுள்ளார்.