நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ஷாருக்கான் நடித்து சமீபத்தில் வெளியான அவரது பதான் படத்தின் வெற்றியால் ஒரு பக்கம் சந்தோஷத்தில் இருந்தாலும் இன்னொரு பக்கம் சில சங்கடங்களும் அவரை தொடர்ந்து வருகின்றன. இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்குள் ரசிகர்கள் என்கிற பெயரில் இரண்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்து பின்னர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மும்பையைச் சேர்ந்த ஜஸ்வந்த் ஷா என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது, தற்போது அபார்ட்மெண்ட் விற்பனை தொடர்பான வழக்கு ஒன்றில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராக கவுரி கான் பொறுப்பு வகுத்து வருகிறார். இந்த நிறுவனம் லக்னோவில் கட்டி வரும் அபார்ட்மெண்ட் ஒன்றில் மும்பையை சேர்ந்த ஜஸ்வந்த் ஷா என்பவர் 86 லட்சம் செலுத்தி ஒரு பிளாட்டை தனக்காக பதிவு செய்திருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் இன்னும் அவருக்கான பிளாட்டை ஒப்படைக்கவில்லை. கவுரி கான் இந்த கட்டுமான நிறுவனத்தின் தூதராக இருப்பதாலும் அவர் கூறிய வார்த்தைகளை நம்பியே இங்கே பிளாட் வாங்க, தான் பணம் செலுத்தியதாகவும் கூறி தற்போது கவுரி கான் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து கவுரி கான் மீது இந்திய தண்டனை சட்டம் 409 செக்சனில் குற்றவியல் நம்பிக்கை மீறல் என்கிற பிரிவின் கீழ் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.