நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து நகைச்சுவை புயலாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இடையில் அரசியல் பிரச்னையில் சிக்கிக்கொண்ட காரணத்தால் பட வாய்ப்புகளை இழந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக அவரது நடிப்பில் பத்துக்கும் குறைவான படங்களை வெளியாகி உள்ளன. இதில் அவர் கதாநாயகனாக நடித்த படங்களும் விஜய், விஷால், ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் காமெடி நடிகராக இணைந்து நடித்த படங்களும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு அவர் ஹீரோவாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்தார். அந்த படமும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தில் மீண்டும் ஒரு முக்கியமான நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு.
மாரி செல்வராஜ் நகைச்சுவை நடிகர்களையும் அழகான குணச்சித்திர நடிகர்களாக மாற்றக்கூடியவர் என்பதால் இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமும் நிச்சயம் பேசப்படும் விதமாகவும் ரசிகர்களை கவரும் விதமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனக்கான டப்பிங்கை துவங்கியுள்ளார் வடிவேலு. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. இந்த படமாவது வடிவேலுவின் திரையுலக பயணத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.