பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் |
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் லவ் டுடே. இந்த படத்தை அவர் இயக்கி அவரே கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து இவானா, யோகி பாபு, ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
தற்போது பிரதீப் ரங்கநாதன் புதிதாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திலும் அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் இன்ஜினியர் மாணவர்களின் கதை களத்தில் உருவாகும் படம் என கூறப்படுகிறது. இதையும் ஏ. ஜி. எஸ் நிறுவனமே தயாரிக்கும் என்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலமாக லவ் டுடே கூட்டணி மீண்டும் இணைகிறது என்கிறார்கள்.