இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் நடித்த 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படம் கடந்தாண்டு மார்ச் மாதம் பான் இந்தியா படமாக வெளியாகி ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
தற்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் போட்டியிடுகிறது. இன்னும் பத்து நாட்களில் அந்த விழா நடக்க இருப்பதால் அமெரிக்க ரசிகர்களுக்கு மீண்டும் படத்தை வெளியிட்டு விருந்து படைக்க உள்ளார்கள்.
நாளை மார்ச் 3ம் தேதி அமெரிக்காவில் உள்ள பல நகரங்களில் எண்ணற்ற தியேட்டர்களில் இப்படம் மீண்டும் வெளியாகிறது. கடந்த சில மாதங்களாகவே ஆஸ்கர் விருதுக்காகக் படத்தைக் கொண்டு செல்லும் முயற்சியில் ராஜமவுலி உள்ளிட்ட குழுவினர் அமெரிக்காவில் படத்தை மிக அதிகமாக புரமோஷன் செய்தார்கள். அதனால், இந்த ரீலிஸிலும் படத்திற்கு குறிப்பிடத்தக்க வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.