நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார் . இதை சிவா இயக்குகிறார். சரித்திரமும், நிகழ்காலம் கலந்த கதையில் இந்தப்படம் உருவாகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் சூர்யா.
தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பிஸ்கட் நிறுவனத்தின் அதிபர் ராஜன் பிள்ளையின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க எண்ணி உள்ளனர். இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் ப்ரிதிவிராஜ் இயக்குகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சூர்யா மற்றும் ப்ரிதிவிராஜ் ஆகியோரின் இரு குடும்பங்களும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.