500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் போஸ் வெங்கட், 'குக் வித் கோமாளி' புகழ், யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமூகத்தில் நிலவும் மத ரீதியான பிரச்சனைகளை பேசும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது.