நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. 13 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தமிழ், தெலுங்கில் வெளியான படம். தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தா நடிக்க 'ஏ மாய சேசவே' என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றியைப் பெற்றது.
90ஸ் கிட்ஸ்களின் அபிமான காதல் திரைப்படமாக மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் திரைப்படமாக இருந்து வருகிறது 'விண்ணைத் தாண்டி வருவாயா'. இந்தப் படத்திற்குப் பிறகுதான் சிலம்பரசனுக்கு தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களிடம் இருந்தும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.
இந்துப் பையன், கிறிஸ்துவப் பெண் என மதம் சம்பந்தப்பட்ட காதலாக இருந்தாலும் படத்தின் காதல் காட்சிகள், சிம்பு, த்ரிஷா ஆகியோரது நடிப்பு. இப்படத்தில் அறிமுகமாகி சிம்புவின் கேமரா நண்பராக நடித்த விடிவி கணேஷ், படத்தின் பாடல்கள், ஒளிப்பதிவு என பல விஷயங்கள் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
கவுதம் மேனன், ஏஆர் ரகுமான் கூட்டணியில் வந்த முதல் திரைப்படம். அதற்கு முன்பு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் கூட்டணி வைத்திருந்த கவுதம் முதல் முறையாக ரகுமானுடன் இணைந்து பாடல்களில் ஒரு புதிய அலை உருவாகக் காரணமாக இருந்தார்.
அப்படத்திற்குப் பிறகு அதை விட சிறந்த காதல் திரைப்படம் இந்த 13 வருடங்களில் இன்னும் வெளிவரவில்லை என தாராளமாகச் சொல்லலாம்.