நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிக்பாஸ் டைட்டில் வின்னரான அசீம் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் பல்பு வாங்கி வருகிறார். அதிலும், எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்றாரோ, அதே தொலைக்காட்சியிலேயே அசீமை கலாய்த்துள்ளனர். விஜய் டிவியின் காமெடி ஷோவான ஊ சொல்றியா? ஊஊ சொல்றியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் அசீம், தனலெட்சுமி ஆகிய இருவரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது அவரை வம்பிழுக்கும் குரேஷி அசீமை 'நீ அருமையான அயோக்கியன்' என முதலில் கிண்டலடிக்கிறார்.
அதற்கு கடுப்பாகி அசீம் குரேஷி அருகில் செல்ல மீண்டும் 'விக்ரமன்ஸ் ஃபேன்ஸ் மீட்டிங்கில் கடைசி வரிசையில் தனியா உட்கார்ந்து வந்தீங்களாமே' என மீண்டும் அவரை கலாய்க்கிறார். அதன்பிறகு குரேஷி அதை சமாளித்து காமெடியாக மாற்றிவிட்டாலும், அவர் அசீமை வறுத்தெடுத்த அந்த புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அசீம் கலந்துகொண்ட இந்த காமெடியான எபிசோடு ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.