ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. சென்னையைச் சேர்ந்த சமந்தா தமிழில் 'மாஸ்கோவின் காவேரி' படத்தில்தான் கதாநாயகியாக நடிக்க முதன் முதலில் தேர்வானார். ஆனால், அந்தப் படம் வெளிவர கொஞ்சம் தாமதமானது.
அதற்கு முன்பாக பிப்ரவரி 26, 2010ம் ஆண்டு அவர் கதாநாயகியாக நடித்த 'ஏ மாய சேசவே' தெலுங்குப் படம் முதலில் வெளியானது. அப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் சமந்தா கதாநாயகியாக நடித்து முதலில் வெளிவந்த படம் 'பாணா காத்தாடி'.
தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் 'கத்தி' படம்தான் அவருக்கு கதாநாயகியாக முதலில் பெரிய வெற்றியைக் கொடுத்தது. தொடர்ந்து 'தெறி, மெர்சல், இரும்புத் திரை, காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். தமிழில் புதிய படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இன்றுடன் திரையுலகில் தனது 13 வருடங்களை நிறைவு செய்வது குறித்து, அவரது ரசிகர்கள் டிரென்டிங் செய்ததை ரீடுவீட் செய்து “இந்த அன்பை நான் உணர்கிறேன். அதுதான் என்னைத் தொடர வைக்கிறது. இப்போதும், என்றும் நான் என்னவாக இருக்கிறேன் என்பது உங்களால்தான்…13 ஆண்டுகள்…ஆனால், இப்போதுதான் ஆரம்பிக்கிறோம்,” எனப் பதிவிட்டுள்ளார்.