நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

3 , வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி, அடுத்தபடியாக லால் சலாம் என்ற படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ஐஸ்வர்யா தனது மகன்களுடன் தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். தற்போது தனது மகன்களான லிங்கா, யாத்ரா இருவரும் பள்ளி அளவில் நடந்த ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றி பெற்று கோப்பை வென்றுள்ளனர்.
இந்த போட்டோக்களை பகிர்ந்து, ‛‛எந்த சூரியனும்... இந்த குழந்தைகளின் விளையாட்டு மீதான உற்சாகத்தை நிறுத்த முடியாது. காலை ஒளியின் பிரகாசத்தில் அவர்கள் ஓடுகிறார்கள். என் மகன்களின் பிரகாசத்தை கண்டு புன்னகைத்தபடி நான் நிற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.