நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். தற்போது நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் ,தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கும் படம் 'புராஜெக்ட் K '.இந்த படத்திற்கு மிக்கி ஜே மெயர் அசைமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் மிக்கி ஜே மெயர் இப்படத்தை விட்டு விலகிய நிலையில் இப்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார் . சந்தோஷ் நாராயணன் உடன் பாலிவுட் பெண் இசையமைப்பாளர் ஒருவரும் இசை அமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது .