நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட் நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் பெறுவது அனைவருக்கும் தெரியும் காரணம். ஹிந்தியில் தயாராகும் படங்களுக்கு 8 மாநிலங்களில் வியாபாரம் இருக்கிறது. வெளிநாடுகளிலும் இந்தி படங்களுக்கு வரவேற்பு இருக்கும். இதன் காரணமாக நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.
தற்போது பெரும்பாலான இந்தி படங்கள் பான் இந்தியா படமாக தயாராவதால் சம்பளத்தை மேலும் அதிரடியாக உயர்த்தி உள்ளார்கள். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோன் ஹாலிவுட் படங்களில் நடிக்க 25 கோடியும், பாலிவுட் படங்களில் நடிக்க 10 கோடியும் சம்பளமாக பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'பதான்' படம் ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு தீபிகா படுகோனின் கவர்ச்சியும், சண்டைக் காட்சிகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் தற்போது தனது சம்பளத்தை 18 கோடியாக உயர்த்தி விட்டார். தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் 'ப்ராஜெக்ட் கே' என்ற படத்தில் நடிக்க தீபிகா 18 கோடி சம்பளம் வாங்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர அமிதாப்பச்சன், திஷா பதானி ஆகியோரும் நடிக்கிறார்கள். இது சுமார் 500 கோடி செலவில் தயாராகும் பான் இந்தியா படமாகும்.