நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ஐகான். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் ஹாட் டாபிக் இதுதான். அல்லு அர்ஜுன் இந்தப் படத்தைப் பெரிதும் விளம்பரப்படுத்தினார். அவர் தனக்கென 'ICON Star' என்ற பட்டத்தையும் ஏற்றுக் கொண்டார். அவர் பல சந்தர்ப்பங்களில் ஐகான் என எழுதப்பட்ட தொப்பியை அணிந்திருந்தார். ஆனால் 'புஷ்பா' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
தற்போது நடிகர் நானி இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கு முன் இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த எம்.சி.ஏ திரைப்படம் நானியின் கேரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக இருந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த 'ஐகான்' படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் நடிகை கீர்த்தி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.