நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லிங்குசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சூர்யா, கார்த்தி, சிம்பு என பல முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி இருக்கிறாராம் லிங்குசாமி. சமீபத்தில் நடிகர் ஆர்யாவுக்கு பையா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை கூறியுள்ளார் லிங்குசாமி. ஆர்யா தான் தற்போது காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் பையா 2 படப்பிடிப்பு தொடங்கலாம் என லிங்குசாமி தரப்பில் சொல்லப்படுகிறது. இதனிடையே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தற்போது பூஜா ஹெக்டே உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த படத்தில் நாயகியாக ஜான்வி கபூர் நடிப்பதாக தகவல் வந்தது. ஆனால் அதை போனி கபூர் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.