நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் இருவருக்குமே மிக பெரிய ரசிக பட்டாளமும் பெரிய மார்கெட்டும் உள்ளது. ஜூனியர் என்டிஆர் கடைசியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் உடன் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் உலக அளவில் மிக பெரிய வசூல் சாதனை ஈட்டியது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ல் ஆண்டில் வெளிவந்த புஷ்பா முதல் பாகமும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி படமாக மாறியது. தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30வது படத்தை இயக்குனர் கொரட்லா சிவா இயக்குகிறார்.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30 வது படமும் , அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய இரு படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.