ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சமுத்திரக்கனி இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 2021ம் ஆண்டு ஒடிடி தளத்தில் வெளியான படம் 'விநோதய சித்தம்'. தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தை தெலுங்கில் பவன் கல்யாண், சாய் தரம்தேஜ் நடிக்க ரீமேக் செய்ய கடந்த பல மாதங்களாக திட்டமிட்டு வந்தனர். ஆனால், பவன் கல்யாண் தேதி கிடைக்காத காரணத்தால் படப்பிடிப்பு ஆரம்பமாவது தள்ளிக் கொண்டே வந்தது. இந்நிலையில் இப்படத்தில் தொடர்ந்து நடிக்க பவன் கல்யாண் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இன்று(பிப்., 22) முதல் ஆரம்பமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் வரை தொடர்ந்து நடக்க இருக்கிறது. தமிழில் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி தெலுங்கிலும் இயக்குகிறார். பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் படத்தின் வசனத்தையும், திரைக்கதையையும் எழுதியுள்ளார். தெலுங்கில் படத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்களாம்.
கடந்த சில வருடங்களாக நடிகராக தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. 'விநோதய சித்தம்' படத்திற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் எதையும் இயக்காமல் இருந்தார். தெலுங்கில் நானி நடித்த 'ஜன்டா பை கபிராஜு' படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தை இயக்குகிறார்.