ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாச்சலமும் ஒரு கேரக்டரில் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை ஏற்கனவே லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அவர் உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள காளகஸ்தி கோயிலுக்கு சென்றுள்ளார் அபிராமி வெங்கடாச்சலம். முன்னதாக, அவர் வசிக்கும் தெருவில் மேளதாளம் முழங்க அவர் அதிரடி ஆட்டம் ஆடி இருக்கிறார். இது குறித்து, அபிராமி வெங்கடாச்சலம் தனது இணைய பக்கத்தில் கூறும்போது, காளகஸ்தியில் சிவராத்திரி கொண்டாட்டம். மிகவும் சந்தோசமாக உள்ளது. தென்னாட்டுடைய சிவனை தரிசனம் செய்துவிட்டு இங்கிருந்து அப்படியே காஷ்மீர் சென்று லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறேன் என்பதை ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருக்கிறார் அபிராமி வெங்கடாச்சலம்.