நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக திடீரென மரணமடைந்தார். நேற்று காலை முதலே அவரது இல்லத்திற்கு பல சினிமா பிரபலங்கள் சென்று இறுதி மரியாதை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமிக்கு இறுதி மரியாதை செய்தார். மேலும், மயில்சாமியின் கடைசி ஆசையான சிவன் கோயிலில் பால் அபிஷேகம் செய்வேன் என்றும் சொன்னார்.
ரஜினிகாந்த், நேற்று பெங்களூருவில் அவரது அண்ணன் சத்யநாராயணாவின் 80வது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கிருந்து சென்னை திரும்பியவர் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுமார் 40 ஆண்டு காலமாக ரஜினிகாந்த், மயில்சாமி இடையே நட்பு இருந்துள்ளது. இருவரும் சிறந்த சிவ பக்தர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
விஜய், அஜித் உள்ளிட்ட சில சினிமா ஹீரோக்கள், ஹீரோயின்கள் மயில்சாமியின் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத நிலையில் ரஜினிகாந்த் போன்ற சீனியர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது சினிமா ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.