Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பாரதிராஜா, இளையராஜா மோதல் வெடித்தது...!

Bharathiraja - Illayaraja clash begins
 பாரதிராஜா, இளையராஜா, அன்னக்கிளி செல்வராஜ் இந்த மூன்று பேருமே மதுரை வைகை ஆற்று மணலில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள். அன்னக்கிளி செல்வராஜ் கதை எழுத, இளையராஜா இசை அமைக்க, பாரதிராஜா இயக்க இவர்கள் நாடகம் மதுரை தேனி, கம்பம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் பிரபலம். மூவருமே சினிமா ஆசையோடு சென்னைக்கு புறப்பட்டு வந்தார்கள். பாரதிராஜா பல இயக்குனர்களிடம உதவியாளராக பணியாற்றி "16 வயதினிலே" படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அன்னக்கிளி செல்வராஜ் எழுதிய "அன்னக்கிளி" கதை பஞ்சு அருணாசலத்துக்கு பிடித்துப்போக அவர் கதையும் -ஓகேவாகி, செல்வராஜ் சிபாரிசில் இளையராஜாவும் அறிமுகமானார். அடுத்த சில வருடங்களில் இவர்களோடு சேர்ந்தவர் வைரமுத்து. அவரும் வடுகபட்டியைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இணைபிரியாத நண்பர்களாக இருந்த இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத அரிய படைப்புகளை தந்தார்கள். இசையில் இளையராஜாவும், பாடலில் வைரமுத்துவும், இயக்கத்தில் பாரதிராஜாவும், கதையில் செல்வராஜும் அதன் உச்சம் தொட்டார்கள்.

காலப்போக்கில் வெற்றிகள் வந்து குவிந்தபோது இவர்களின் குணங்கள் மாறத் தொடங்கியது. முதலில் இந்த நால்வர் அணியில் இருந்து பிரிந்தவர் செல்வராஜ். கதைக்கு இவர்கள் தரும் ஊதியம் குறைவு என்பதால், பலருக்கு கதை எழுத கிளம்பினார் செல்வராஜ். புகழ்பெற்ற "அலைபாயுதே" படத்தின் கதை செல்வராஜுடையது. அடுத்து வைரமுத்து விலகிக் கொண்டார். இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்குமிடையே இருந்த ஈகோ பிரச்சினை ஒரு முக்கிய சம்பவத்தில் வெடித்துச் சிதற நிரந்தரமாக பிரிந்து விட்டார்கள். பாரதிராஜா மட்டும் அனைவரிடமும் நெருக்கமாக இருந்து வந்தார்.

பாரதிராஜா, இளையராஜாவை வாடா போடா என்று பொது மேடையிலேயே அழைக்ககூடியவர். உலகமே தன்னை இசை மேதையாக கொண்டாடும்போது இவன் மட்டும் இப்படி பேசுகிறானே என்ற கவலை இளையராஜாவுக்கு உண்டு. வைரமுத்துவையும், இளையராஜாவையும் சேர்த்து வைக்கும் சில முயற்சிகளைச் செய்தார் பாரதிராஜா. அதை முளையிலேயே கிள்ளி எரிந்தார் இளையராஜா. வைரமுத்துவுடன் மீண்டும் இணைவதையும், பாரதிராஜா தன்னை ஒருமையில் விழிப்பதையும் அடியோடு வெறுத்து வந்தார் இளையராஜா.

இது அண்மையில் மதுரையில் நடந்த "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக வெடித்தது. அதில் இளையராஜாவை பாராட்டி பேசிய பாரதிராஜா வழக்கம்போல இளையராஜாவை வாடா போடா என்று ஒருமையில் பேசினார். சொந்த மண்ணில் நடக்கும் விழாவில் இப்படி அவர் பேசியது இளையராஜாவை அதிர்ச்சி அடைய வைத்தது. "நீ யார்கிட்டேயும் பத்து நிமிஷம் உட்கார்ந்து பேச மாட்டேங்ற. எல்லார்கிட்டேயும் பேசு. நீ தலைக்கனம் பிடிச்சு ஆடுற. நாம என்ன இன்னொரு தடவை பொறக்கவா போறாம். இருக்கிறப்போ சந்தோஷமா இருந்துட்டு போவோம். நாங்க மூணு பேரு, அதுல ஒருத்தன் (வைரமுத்து) இங்க இல்லை. திரும்பவும் மூணு பேரும் ஒண்ணா சேர்வோம்" என்று பேசினார்.

இது இளையராஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அன்று விழா முடிந்ததும் பாரதிராஜாவிடம் சொல்லிக் கொள்ளாமலே சென்னை திரும்பினார். இப்போது அதுபற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:  அவருக்கு (பாரதிராஜா) என் மீதுள்ள குறையெல்லாம், நான் அவனைப்போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ? அப்படி நான் மாறுவது நடக்கிற காரியமா? அவர் நினைக்கிறபடி நான் இருக்க வேண்டுமா?. இல்லை என்றால் ஏன் இந்த புத்திமதி. என்னை மேடையில் அவமதிப்பதா?. அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான். அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று அவமதித்த பேசியது மட்டும் ஏற்புடையதுதானா?" என்று கூறியிருக்கிறார்.

"பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் அவ்வப்போது சிறு ஊடல்கள் வருவது சகஜம்தான். ஆனால் அதனை மீடியாக்களிடமும், பொது இடங்களிலும் வெளிப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருப்பது வேதனையாக உள்ளது" என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து சேர்வது மட்டுமல்ல இனி இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைவது என்பதே கடினமானது என்கிறார்கள்.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (48)

Aleem Raja - kampala,உகான்டா
17-மார்-2013 22:35 Report Abuse
Aleem Raja ஆஸ்கர் தேவை இல்லை என்று சொல்லும் நண்பர்கள்,இளையராஜா இசை அமைத்த "சிம்போனி" என்ன ஆனது என்று கேட்டு சொல்லுவீர்களா?இதை எப்போது வெளியிடபோகிறார் என்று கேட்டு சொன்னால் நன்றாக இருக்கும்.
Rate this:
2 members
1 members
1 members
Share this comment
Aleem Raja - kampala,உகான்டா
17-மார்-2013 22:20 Report Abuse
Aleem Raja நான் சொல்ல நினைத்த கருத்துக்களை நண்பர் விஜய்ஆதிராஜ் அவர்கள் சொல்லிவிட்டார்.நமக்கு தெரிந்து இவர்கள் மூவரும் நண்பர்கள் என்பதால் இவர்கள் பிரிவை பற்றி பேசுகிறோம்.இளையராஜாவுக்கு தலைக்கனம் இல்லை என்றால் மணிரத்னம்,கே.பாலசந்தர் போன்ற பெரும் இயக்குனர்கள் இவரை இசை அமைக்க கூப்பிடாததன் மர்மம் நம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.இளையராஜாவின் பாடல்கள் காலத்தால் அளிக்க முடியாதது என்பது உண்மை.குறிப்பாக 80-90 பாடல்கள் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.ஆனால் இப்போதைய நிலைமை வேறு.ஏதோ தெலுங்கில் பாடல்கள் ஹிட் ஆகிவிட்டது என்று நியூஸ் போட்டுள்ளார்கள்.சமீபத்தில் இளையராஜா இசை அமைத்த நீதானே என் பொன் வசந்தம் பட பாடல்கள் எந்த அளவுக்கு இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.அந்த படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் பாடல் அவர் அமைத்த பழைய பாடல்தான்.இப்போது இவரைவிட யுவன்ஷங்கர் ராஜா நன்றாக இசை அமைக்கிறார்.யுவனுக்கு வழிவிட்டு இவர் ஒதுங்கலாம்.ஒவ்வருவருக்கும் ஒரு டைம் உண்டு.இது இளைஞர்களின் காலம்.இளையராஜாவை நம்பி படம் எடுத்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது.
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Raja - Doha-Qatar,இந்தியா
17-மார்-2013 16:43 Report Abuse
Raja யாராக இருந்தாலும் பொது இடத்தில் பேசும்பொழுது நாகரீகமாக பேசவேண்டும் அதுதான் தமிழ் பண்பாடு .....நீ தனியாக இருக்கும்போது வா போ என்று பேசு அதில் தவறு இல்லை.....இந்த மரியாதையை கூட தெரியவில்லை....இளையராஜா ஒன்றும் சாதாரண மனிதர் இல்லை அவர் LEG .......
Rate this:
2 members
1 members
5 members
Share this comment
24-பிப்-2013 07:14 Report Abuse
Senthilkumar M. Akkanapuram. Srivi அவன் இவன் என்று பேசுவது நன்பன் கடவுளாக இருந்தாலும் மற்றொரு நன்பன்தான் வாடா போடா என்று பாசத்துடனும் உரிமையுடனும் அழைக்க படுவது வழக்கம்தான் நன்பன் ஒருமையில் பேசினான் என்று அதை இவ்வ்வ்வலோ பெரிய பிரச்சனையாக ஆக்கியுள்ள இளையராசா எப்படி ஒரு ஆன்மீகவாதி்யாக இருக்கமுடியும் இந்து மதத்தி்ல் ஆதி் முதல் அந்தம் வரை காலங்களிலும் சரி கடவுளகளிலும் சரி யாரும் எந்த கடவுளையும் கூட வாங்க சிவன் வாங்க முருகன் என்று அழைக்காத போது அவரகளே வருத்தம் அடையவில்லை அப்படி இருக்க இந்த ஈன உடல்களை கொண்டுள்ள மானிடர்களுக்குள் எதி்ர்பார்ப்பும் இவ்வ்வ்வளோ இருத்தல் கூடாது பாரதி்ராசா பேசியது தவரு என்று கூறும் நன்பர்களின் நன்பர்களே இப்போது பரதி்ராசா பேசியது தவறென கூறும் உங்கள் நன்பர்கள் உங்களிடமும் இவ்வாறு தான் வார்த்தைகளை எதி்ர்பார்ப்பர் வார்த்தைக்குதான் மரியாதை இவர்கள மேல் கொண்டுள்ள பாசத்தி்ன் அடிப்படையில் தான் வாடா பொடா எனும் வார்த்தை வருகின்றது இம்மாதி்ரியான நபரை விட ஒருமை வார்த்தைகளே பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவை உடனே பரதி்ராசா இம்மாதி்ரியான நபர்களின் நட்பை முறித்தி்ட வேண்டும் இளையராசா மாதி்ரியான ஆட்களுக்காக தான் எம் ஆர் ராதா ரத்தகண்ணீர் எனும் மாபெரும் காவியத்தை படைத்தும் மனிதன் மாறவில்லை முதலில் போய் ரத்தகண்ணீர் படத்தை பார்
Rate this:
2 members
3 members
16 members
Share this comment
Niyayavaan - Delhi,இந்தியா
22-பிப்-2013 19:30 Report Abuse
Niyayavaan இளையராஜா சிறந்த இசை அமைப்பாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் அவருக்கு ஈகோ அதிகம் என்பதையும் மறந்துவிடக்கூடாது , பாரதிராஜா என்ற கள்ளம் கபடமற்ற , ஜாதி பேதம் பார்க்காத ஒரு சிறந்த மனிதனை, நண்பனை அவர் இப்படி பேசுவதை தமிழகத்தில் இவர்களைப்பற்றி தெரிந்தவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ,பாரதிராஜா வெறும் சினிமாக்காரர் மட்டுமல்ல அவர் சமூகத்தின் அவலங்களுக்காக, தமிழனுக்காக ,தமிழ்நாட்டுக்காக முதல் ஆளாக நின்று போராடுபவர் ,எத்தனையோ மேடைகளில் இளையராஜாவை, பாரதிராஜாவைவிட அதிகமாக புகழ்ந்தவர்கள் யாரும் இருக்க முடியாது ,அவரைப்பற்றி பேசுவதற்கு முன் இளையராஜா சற்று நிதானமாக சிந்தித்து பழையதைஎல்லாம் நினைத்து பேசியிருக்கவேண்டும்,என்னதான் இவர் இசையில் பெரிய ஆளாக இருந்தாலும் தாய்க்கு மகன்தானே , அண்ணனுக்கு தம்பிதானே ,நல்ல நண்பனுக்கு நண்பன்தானே ,முதலில் அவர் தரையில் தான் இருக்கிறோம் வானத்தில் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் ,தன்னுடைய வறட்டு பிடிவாதத்தைஎல்லாம் விட்டுவிட்டு குடும்பத்தினரிடமும் ,நண்பர்களிடமும் , ரசிகர்களிடமும் மற்றும் எல்லோரிடமும் விட்டுக்கொடுத்து பழக தெரிந்துகொள்ளவேண்டும் அப்படியிருந்தால் மட்டுமே தமிழர் நெஞ்சங்களில் அவருக்கு ,அப்துல்கலாமை போன்று ,எம் எஸ் வீ போன்று நிரந்தர இடம் பிடிக்க முடியும் , மீண்டும் இவர்கள் இருவரும் எல்லாவற்றையும் மறந்து நட்போடு வாழ ஒரு தமிழனாக உரிமையோடு வேண்டுகிறேன் .
Rate this:
3 members
1 members
31 members
Share this comment
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in