நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. வழிநெடுக ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட அவரது உயிர் பிரிந்தது.
மேடை நாடகங்கள், மிமிக்கிரி, காமெடி, குணச்சித்ரம் என பல பரிமாணங்களில் மக்களை சிரிக்க வைத்தவர் மயில்சாமி. அவரின் மறைவு திரை உலகினர் மட்டுமின்றி பகுதிமக்களுக்கும் அவரால் உதவி பெற்றவர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏழைமக்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராக இருந்த மயில்சாமி பலருக்கு கல்விச்செலவுக்கு பணம் வழங்கி உதவியுள்ளார். அவர் செய்த உதவிகளில் பலவற்றை வெளியே கூட சொன்னதில்லை. அந்தளவுக்கு பிறருக்கு உதவும் குணம் கொண்டவராகவும், வெள்ளைமனம் படைத்தவராகவும் இருந்தார்.

மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினிகாந்த், மனோபாலா, ஜெயராம், நடிகர் சங்கம் சார்பில் நாசர், கார்த்தி, பிரபு, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர், ஆதி பினிஷெட்டி, ஸ்ரீகாந்த் தேவா, எம்எஸ் பாஸ்கர், கொட்டாச்சி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கமல், சரத்குமார், விக்ரம், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அஞ்சலிக்கு பின் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பொதுமக்கள் வழிநெடுக கண்ணர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஏவிஎம் மின்மயானத்தில் வைத்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட பின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மக்களை சிரிக்க வைத்த நாயகன் மயில்சாமி இன்று மண்ணுலகை விட்டு விடைபெற்றார்.