நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிவராத்திரியை முன்னிட்டு பல சினிமா பிரபலங்கள் பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்தினர். தற்போது 'லியோ' படத்தில் நடிப்பதற்காக காஷ்மீர் சென்றுள்ள நடிகை த்ரிஷா அங்குள்ள சிவன் கோயிலில் சிவலிங்கத்திற்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து
வழிபாடு நடத்தியுள்ளார். அந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் நடிகைகள் பலரும் தற்போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். கிறிஸ்துவ மதத்தில் பிறந்திருந்தாலும் நயன்தாரா, சமந்தா, அமலா பால் ஆகியோர் இந்து கோயில்களுக்குத் தொடர்ந்து சென்று வருகிறார்கள். சமீபத்தில் பழனி கோயிலில் படிக்கட்டுகளில் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டார் சமந்தா.
'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு த்ரிஷாவின் திரையுலகப் பயணத்தில் அடுத்து ஒரு புதிய இன்னிங்ஸ் ஆரம்பமாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருவதால் அங்கேயே சிவராத்திரி வழிபாட்டைச் செய்துள்ளார் த்ரிஷா.