தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
1984ல் நடிகர் பாக்யராஜ் நடித்த தாவணி கனவுகள் என்ற திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் நடிகர் மயில்சாமி. தூள், கில்லி, எல்கேஜி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மயில்சாமி உடல்நலக் குறைவால் இன்று (பிப்.,19) காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த மயில்சாமி, தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழகம் முழுவதும் அறிமுகமானவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
நடிகர் கமல்ஹாசன்
நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி.
விக்ரம்
உங்கள் இனிமையான வேடிக்கையான வழிகள் எப்போதும் நினைவில் இருக்கும்.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர்.விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார். மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகர் யோகி பாபு
சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்திலிருந்து நன்கு தெரிந்தவர். பலருக்கும் உதவிக்கரம் நீட்டியவர். மயில்சாமியின் மறைவு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
நடிகர் சரத்குமார்
எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அன்பு நண்பர் மயில்சாமி அவர்களை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.