நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல், பிகில் மற்றும் வாரிசு உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியவர் விவேக். விஜய்க்காக இவர் எழுதிய ஆளப்போறான் தமிழன், சிங்கப் பெண்ணே போன்ற பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. இந்த நிலையில் பொங்கலுக்கு விஜய் நடித்து வெளியான வாரிசு படத்திற்கு பாடல் எழுதியதோடு, திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார் பாடலாசிரியர் விவேக். மேலும், வாரிசு படத்தின் இசை விழாவில் பேசிய விஜய், பாடலாசிரியர் விவேக்கிற்குள் ஒரு இயக்குனர் இருக்கிறார், விரைவில் அவரை பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் தனக்கு முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாடலாசிரியர் விவேக், ‛சில உறவுகளை விவரிக்க முடியாது. இந்த நம்ப முடியாத பயணத்தில் நீங்கள் என்னிடம் ஒரு மூத்த சகோதரரை போல அன்பும் ஆதரவும் தருகிறீர்கள். என் கலைப்பயணத்தில் இந்த அழகான தருணத்தை எதனாலும் வெல்ல முடியாது. லவ் யூ தளபதி' -என்று பதிவிட்டு இருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.