சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அதன்பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். துணிவு படத்திற்கு பின் கமலை வைத்து ஒரு படத்தை வினோத் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதோடு தனுஷிற்கும் ஒரு கதை சொல்லி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தனது அடுத்தப்பட வேலையில் வினோத் இறங்கி உள்ளார்.
சமீபத்தில் நடிகர் கமலை சந்தித்து பேசி உள்ளாராம் வினோத். அப்போது இவர்கள் இணையும் படம் பற்றி விவாதித்தாக தெரிகிறது. அப்போது அதை முழு படமாக்க கமல் சம்மதம் சொல்லிவிட்டாராம். இதையடுத்து இந்த படத்திற்கான திரைக்கதை உள்ளிட்ட முன்கட்ட பணிகளை வினோத் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.