நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சில மாதங்கள் ஓய்வில் இருந்தவர் தற்போது மீண்டுள்ளார். தொடர்ந்து பழநி முருகனை சமீபத்தில் தரிசனம் செய்தார். தற்போது தனது அடுத்தப்படமான குஷியில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இதனால் தனது உடலை பிட்டாக மாற்றும் முயற்சியில் முன்பு போல் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்களையும் அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா உடன் தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்த மனோஜ் பாஜ்பாய் அவருக்கு ஒரு அறிவுரை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு பேட்டியில், ‛‛சமந்தா கடின உழைப்பாளி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் மிகவும் வலி தரக்கூடிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம். எளிய உடற்பயிற்சிகள் இப்போதைக்கு அவர் மேற்கொள்ள வேண்டும்'' என கூறியுள்ளார்.