சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
தமிழ் தொலைக்காட்சிகளில் பல தரமான எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் விஜய் டிவி, அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 4-ல் சென்ற வாரம் காளையன், ஷெரின், கிஷோர் ஆகியோர் எலிமினேஷன் ரவுண்டுக்கு சென்றனர். அதில் கிஷோர் சுமாராக சமைத்ததாக கூறி கிஷோர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், யு-டியூப் சேனல் ஒன்று சிவாங்கிக்கு பதில் கிஷோர் வெளியேற்றப்பட்டது போலவும், அதை கிஷோரே நேர்காணலில் சொல்வது போலவும் டைட்டில் வைத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. பேன் பேஜ் ஒன்றிலும் 'சிவாங்கிக்கு பதில் என்ன துரத்திட்டாங்க. கழுவி ஊற்றிய கிஷோர்' என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. வைரலான அந்த பதிவை பார்த்து பலரும் விஜய் டிவியையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் வசை பாடினர். இதுகுறித்து தகவல் அறிந்த கிஷோர் அந்த பதிவின் கீழ், 'தயவு செய்து இதை டெலிட் செய்து விடுங்கள். நான் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. அந்த செய்தி போலியானது. போலி செய்திகளை நீக்கிவிடுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் எலிமினேஷன் குளறுபடி ஒருவழியாக முடிவுக்கு வந்தது.