நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி தமிழ் தொலைக்காட்சிகளில் பல ஹிட் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். திரைப்பட வாய்ப்பின் காரணமாக சீரியலை விட்டு ஒதுங்க நினைத்த அவருக்கு அதன்பின் சரிவர வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் தான் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசனில் என்ட்ரி கொடுத்து மீண்டும் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றார். பைக் ரைட் செய்வதில் அதிக விருப்பமுள்ள ரச்சிதா, ராயல் என்பீல்ட் கம்பெனியின் பைக் ஒன்றை சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார். அதில் அடிக்கடி ரைட் செய்து போட்டோஷூட்களையும் வெளியிடுவது வழக்கம். தற்போது அந்த பைக்கில் ஏறி ஜாலியாக சுற்றித்திரியும் ரச்சிதா இரண்டு கைகளையும் விட்டு கெத்தாக பைக் ஓட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது ரசிகர்களிடத்தில் லைக்ஸ்களை குவிக்கத் தொடங்கியுள்ளது. அதேசமயம் பிரபலங்கள் இப்படி செய்வது தவறான முன்னுதாரணம் என பலரும் கருத்தும் பதிவிட்டுள்ளனர்.