நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அடுத்து வெளிவர உள்ள உதயநிதி ஸ்டாலினின் படம் 'கண்ணை நம்பாதே'. கடைசி படமாக 'மாமன்னன்' வெளியாகிறது. கண்ணை நம்பாதே படத்தை 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கி உள்ளார். இதில் உதயநிதி ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சித்துகுமார் இசை அமைத்துள்ளார், ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் மாறன் கூறியதாவது: ஒரு பிரச்னையில் சிக்கும் உதயநிதி அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரு இரவில் நடக்கும் கதை. அந்த ஒரு இரவுக்கு முன்னும், பின்னுமான சம்பவங்கள் திரைக்கதையில் சொல்லப்படுகிறது. இதில் உதயநிதி கிராபிக்ஸ் டிசைனராக நடித்திருக்கிறார். அவரது காதலியாக ஆத்மிகா நடித்துள்ளார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் போன்றே இதுவும் கிரைம் த்ரில்லர் படம். 80 சதவீத காட்சிகள் இரவில்தான் நடக்கும். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது என்றார்.