நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் ஜேம்ஸ் பாண்டு படத்தில் நடித்தவர் ரேணு தேசாய். தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரேணு பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2012ம் அண்டு பவான் கல்யாணிடமிருந்து பிரிந்து சென்ற ரேணு தேசாய் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் இதய நோயால் அவதிப்பட்டு வருவதாக உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு இதய கோளாறு ஏற்பட்டிருக்கிறது. மேலும் பல உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறேன். அவற்றுடன் நான் தொடர்ந்து போராடி வருகிறேன். எனக்கு நெருக்கமானவர்களுக்கு இது தெரியும். இதனால் நான் கலங்கவில்லை. இப்போதும் வலுவுள்ளவளாக இருக்கிறேன். இந்த பிரபஞ்சம் நமக்கென்று ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருக்கும், அதன்படிதான் எல்லாம் நடக்கும். வாழ்க்கையின் மீது நம்பிக்கை வையுங்கள். உடல் நலத்தை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை இறைவன் கவனித்துக் கொள்வான். விரைவில் நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.