சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
நடிகை அமலாபாலுக்கு எல்லாமே குறுகிய காலத்தில் நடந்து முடிந்தது. சிறிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலாபால் அடுத்த சில படங்களிலேயே விஜய்யுடன் நடித்தார். அடுத்த சில ஆண்டுகளுக்குள் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதற்கடுத்த சில ஆண்டுகளுக்குள் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அடுத்து ஒரு காதல், திருமணம் சர்ச்சையில் சிக்கினார். இப்போது அதிலும் பிரிவு. இப்படி எல்லாமே அவருக்கு வேகமாக நடந்து முடிந்தது. இதனால் வாழ்க்கை அவருக்கு நிறைய கற்றுக் கொடுத்து விட்டது. இப்போது அவருக்கு தேவை மன அமைதி. அதை தேடி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான அமலா பால் இந்து மதத்தின் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றபோது அவர் கிறிஸ்தவர் என்பதால் உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டினார். இருப்பினும் தொடர்ச்சியாக ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் பழநிக்கு வந்து முருகனை தரிசித்து சென்றார்.
தற்போது அவர் இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்று தங்கி உள்ளார். அங்கு இயற்கை உணவு, யோகா, தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளார். இயற்கையோடு அவர் இணைந்திருப்பதையும், ஆசிரமத்தில் தங்கி இருப்பதையும் தனது இன்ஸ்டாகிராமில் படங்கள், வீடியோக்களாக வெளியிட்டுள்ளார்.