நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாகுபலி படங்கள் மூலம் இந்திய அளவிலான ஸ்டாராக உருவெடுத்துள்ளார் பிரபாஸ். தற்போது ஆதிபுருஷ், சலார், புராஜெக்ட் கே உள்ளிட்ட பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக தான் நடிக்கும் படங்களில் சக நடிகர்களுக்கு விருந்து கொடுப்பதை பிரபாஸ் வழக்கமாக கொண்டுள்ளார். அமிதாப் பச்சன், பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா கபூர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இவரின் விருந்தோம்பலில் நனைந்துள்ளனர். தற்போது நடிகை தமன்னாவும் பிரபாஸின் விருந்தோம்பல் குறித்து சிலாகித்துள்ளார்.
இதுதொடர்பாக ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரை பொறுத்த வரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாசை சொல்லலாம். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவர் மீதும் அவர் காட்டும் அக்கறையுடன் கூடிய அரவணைப்பு அலாதியானது. அவரது இந்த விருந்தோம்பல் பண்பு அவருடன் பணியாற்றும் சூழலை எப்போதும் இதமாக வைத்திருக்கும்” என கூறியிருக்கிறார்.