நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ் சேனல் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பி.,19) பிற்பகல் 2 மணிக்கு அதர்வா, பிரியா பவானி சங்கர் நடித்த குருதி ஆட்டம் படத்தை ஒளிபரப்புகிறது. இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். ராதாரவி, வத்சன் சக்கரவர்த்தி, வினோத் சாகா, கண்ணா ரவி, பிரகாஷ் ராகவன், பாலஹாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மதுரையில் ஒரு மருத்துவமனையில் வார்டு பாய் ஆக வேலை பார்ப்பவர் சக்திவேல் (அதர்வா). கபடி விளையாட்டில் சிறந்து விளங்கும் இவரது அணிக்கும் மதுரையையே ஆட்டிப் படைக்கும் காந்திமதியின் (ராதிகா) மகன் முத்துவிற்க்கும் (கண்ணா ரவி) இடையே கபடி விளையாட்டில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த போட்டியே பகையாக மாறி கபடி ஆட்டம் எப்படி குறுதி ஆட்டமாக மாறியது என்பதுதான் படத்தின் கதை.