நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மார்வெல் ஸ்டுடியோஸின் அவஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரம் 'ஆன்ட்மேன்'. அக்கதாபாத்திரத்தை மையப்படுத்தி இதுவரை இரண்டு 'ஆன்ட்மேன்' படங்கள் வெளிவந்துள்ளன.
2015ம் ஆண்டு 'ஆன்ட்மேன்' என்ற பெயரிலேயே முதல் பாகத் திரைப்படம் வெளிவந்தது. அக்கதாபாத்திரத்தில் பால் ருட் நடித்திருந்தார். முதல் பாகம் சுமார் 150 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் தயாராகி 500 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தது. இரண்டாம் பாகம் 'ஆன்ட் மேன் மற்றும் த வாஸ்ப்' என்ற பெயரில் 2018ம் ஆண்டு வெளிவந்தது. 190 மில்லியன் பட்ஜெட்டில் தயாராகி 600 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்தது.
இப்போது மூன்றாம் பாகம் 'ஆன்ட் மேன் மற்றும் த வாஸ்ப் - குவான்டமேனியா' என்ற பெயரில் நாளை(பிப்., 17) இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. மூன்று பாகங்களையும் பேடோன் ரீட் இயக்கியிருக்கிறார்.
சுமார் 200 மில்லியன் யுஎஸ் டாலர் பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 500 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தால்தான் இந்தப் படம் லாபம் அடைய முடியும் என்கிறார்கள். முந்தைய இரண்டு பாகங்களைப் போல இந்த மூன்றாவது பாகமும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால், படம் சுமாராகத்தான் இருக்கிறது என வெளிநாட்டு பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.