நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளியான படம் 'பதான்'. இப்படம் உலக அளவில் 963 கோடி வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியாவில் மொத்த வசூலாக 600 கோடி, நிகர வசூலாக 498 கோடி, வெளிநாடுகளில் மொத்த வசூலாக 363 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது இந்திய நிகர வசூல் 500 கோடியைக் கடந்துள்ளது. அதை முன்னிட்டு இந்தியாவின் முக்கிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களான பிவிஆர், ஐனாக்ஸ், இந்தியா சினிபோலிஸ் ஆகிய தியேட்டர்களில் இந்தியா முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை டிக்கெட் கட்டணம் ரூ,110 மட்டுமே என தயாரிப்பு நிறுவனம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. டிக்கெட் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதால் படத்தை மீண்டும் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதே அதற்குக் காரணம். இந்த வார இறுதிக்குள் இப்படம் உலக அளவில் 1000 கோடி வசூலைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.