நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ள பிருந்தா மாஸ்டர், ‛ஹேய் சினாமிகா' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடித்த அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் இயக்கி இருக்கும் இரண்டாது படம் 'தக்ஸ்'. இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார்.
ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைக்க, ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார். படம் வருகிற பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் குறித்து பிருந்தா மாஸ்டர் கூறியதாவது: எனது முதல் படம் காதல் படம் என்பதால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அடுத்த படம் இயக்க முடிவு செய்தேன். காரணம் பெண் இயக்குனர்கள் என்றால் இப்படியான படம்தான் எடுப்பார்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்படுகிறார்கள். சுதா கொங்கரா போன்றவர்கள் அதை உடைத்திருக்கிறார்கள். நானும் அதை செய்ய விரும்பினேன். அதுதான் இந்தப்படம்.
தூத்துக்குடி பகுதியில் அடிதடி செய்யும் தாதாக்களை தக்ஸ் என்பார்கள். அவர்களை பற்றிய படம்தான் இது. வெவ்வேறு கிராமங்களில் சூழ்நிலை காரணமாக தவறு செய்தவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து தப்பும் அவர்கள் எப்படி தக்ஸாக மாறுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் படம். என்றார்.