நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி ஏதாவது பதிவிட்டு அவரைப் பற்றிய அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பார். இரண்டு வாரங்களுக்கு முன்பு 'வாத்தி' பட இயக்குனரான வெங்கி அட்லூரி திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கலர் கலரான ஆடை ஒன்றை அணிந்து வந்தார். விசேஷங்களுக்கு வீட்டிற்கு வெளியில் போடும் ஷாமியானா கலரில் அந்த ஆடை இருந்ததால் ரசிகர்கள் அது பற்றி கிண்டலடித்து கமெண்ட் போட்டிருந்தார்கள்.
“என்ன மேடம், தெலுங்குப் பட ஷுட்டிங்கிலிருந்து அப்படியே திருமணத்திற்குப் போய்விட்டீர்களா,” என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தார்கள். பலத்த கிண்டலுக்கு ஆளான அந்த ஆடையுடன் ஒரு போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தன்னைக் கிண்டல் செய்து பதிவிட்டவர்களுக்கு பதிலடியாகத்தான் அந்த போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார் போலிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்துள்ள 'தசரா' படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'போலா சங்கர்' படத்தில் நடித்து வருகிறார். தமிழில் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து 'சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.