ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஷால், தலைமையிலான, "சென்னை ரினோ கிரிக்கெட் அணியின், பிராண்ட் அம்பசடராக, நடிகை ஸ்ருதி ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளாராம். இதையடுத்து, கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, சக நடிகைகளுடன், அவர் சமீபத்தில் ஐதராபாத் சென்றார். ஸ்ருதியுடன், அவரது தங்கை அக்ஷராவும் இருந்தார். "அக்ஷரா எப்படி, இங்கே வந்தார் என, ஸ்ருதியிடம் கேட்டபோது," எனக்கு விளையாட்டில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால், அக்ஷராவுக்கு, அதிக ஈடுபாடு உண்டு. அவள் கால்பந்து விளையாட்டின் தீவிர விசிறி. அனைத்து முக்கியமான போட்டிகளையும் பார்த்து விடுவாள். பிரபலமான அனைத்து வீரர்களின் பெயர்களும், அவளுக்கு தெரியும். இந்த போட்டியை பார்ப்பதற்காக, அவளையும் அழைத்து வந்தேன். ஆனால், மழை வந்து, எங்கள் ஆசையை கெடுத்து விட்டது. நடிகர்கள், கிரிக்கெட் விளையாடுவதை பார்ப்பது, வித்தியாசமான அனுபவமாக உள்ளது என, குதூகலிக்கிறார், ஸ்ருதி.