ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கடந்த 2020ல் கொரோனா முதல் அலை ஆரம்பித்த சமயத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வரை அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் பலருக்கும் போக்குவரத்து, உணவு, கல்வி, மருத்துவம், விவசாயம் என வெவ்வேறு விதமான உதவிகளை வழங்கியவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அவரை ரியல் ஹீரோவாகவே போற்றி புகழ ஆரம்பித்து விட்டனர். இன்னும் சில ஒரு படி மேலே சென்று அவருக்காக மிகப்பெரிய சிலைகள் அமைப்பதும் அடுத்த கட்டமாக சில இடங்களில் அவருக்காக கோவில் கட்டவும் கூட ஆரம்பித்தனர்.
அப்படி தெலங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேடில் அவருக்காக ரசிகர்களால் கட்டப்பட்டிருந்த கோவிலுக்கு சமீபத்தில் வருகை தந்தார் சோனு சூட். அதேசமயம், "எனக்கு இதில் உடன்பாடு சிறிதும் இல்லை.. நான் அந்த அளவுக்கு தகுதியானவனும் இல்லை. மக்களை சந்திப்பதற்காக தான் இப்போது கூட நான் வந்தேன். அதேசமயம் என் மீது மக்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடுதான், இது போன்று சிலைகளாகவும் கோவிலாகவும் அவர்கள் வெளிக்காட்டுகின்றனர் என் மீது அன்பு கொண்டவர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும் என்றால் கோவிலுக்கு பதிலாக பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் கட்டினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நானும் அதுகுறித்து பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார் சோனு சூட்.