ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளார் நயன்தாரா. கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நடைபெற்றபோது அதில் நேரில் வந்து கலந்து கொண்டார் ஷாருக்கான். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அப்போதே தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் ஷாருக்கான்.
இந்தநிலையில் சென்னை எக்மோரில் உள்ள நயன்தாராவின் அபார்ட்மெண்டுக்கு நேரில் வருகை தந்து அவரது குழந்தைகளை பார்த்ததுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் மீண்டும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் ஷாருக்கான். நயன்தாராவின் அபார்ட்மெண்ட்டுக்கு ஷாருக்கான் வந்ததும், அவரை வரவேற்க நயன்தாரா வாசலுக்கே வந்ததுமான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.