ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது லியோ படப்பிடிப்பில் பிக்பாஸ் சீசன் மூன்றாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அபிராமி வெங்கடாசலமும் இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் மாதவன் இயக்கி நடித்த தி ராக்கெட்ரி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தான் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியா வெளியிட்டு லியோ படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் அபிராமி.