நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழகத்தில் தற்போது வட இந்தியர்கள் அதிக அளவில் குடியேறி வருகிறார்கள். குறைந்த சம்பளத்தில் அவர்கள் வேலை செய்வதால் எல்லா இடத்திலும் அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் இதற்கு எதிராக சில அமைப்புகள் இப்போது கொடி பிடிக்கின்றன. வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பதால் தமிழர்கள் பிற்காலத்தில் பெரும் பிரச்சினகைளை சந்திக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். கர்நாடகாவில், மும்பையில், கேரளாவில் பெரும் அளவில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் இந்தியவர்கள் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இசை அமைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான விஜய் ஆண்டனி திடீரென இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கிறார். அதில் “வடக்கனும், கிழக்கனும், தெற்கனும், மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்து ஆதரவும், எதிர்புமான கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. விஜய் ஆண்டனிக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய் ஆண்டனி தற்போது 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்தபோது விபத்தில் சிக்கியவர் படுகாயத்துடன் உயிர் தப்பி தற்போதுதான் உடல்நலம் தேறி வருகிறார்.