நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் கமல்ஹாசன் சென்னையில் புத்தக விற்பனை நிலையத்தை துவங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அரசியலையும், கலாச்சாரத்தையும் தனித்தனியாக வைத்திருக்கக் கூடிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியதுதான் அரசியல். ஆள்பவர்கள் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது என நினைக்கிறேன். 'நாம் நியமித்தவர்கள் அவர்கள்' என்ற எண்ணம் மக்களுக்கு வரும்போது ஜனநாயகம் நீடூழி வாழும். ஒவ்வொருவரும் தன்னளவில் தலைவன் என்று நினைக்கும் பட்சத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாறும்.
என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்பது சாதி. 21வயதிலிருந்தே நான் இதனை சொல்லிக் கொண்டிருக்கிறேன். தற்போது அதனை பலமான வார்த்தைகளில் சொல்லும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. சாதியை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதை அனைவரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்றும் நடந்தபாடில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.