நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. கோலமாவு கோகிலா, எல்கேஜி, டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. தற்போது ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் புதிய படம் 'லெக்பீஸ். இந்த படத்தில் நடிப்பதற்காக சம்பளத்தை பெற்றுக் கொண்டு நடிக்க மறுத்து வருவதாக அந்த படத்தில் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், 'லெக்பீஸ்' படத்தில் 10 நாள் நடிக்க ரெடின் கிங்ஸிலிக்கு முழு சம்பளமும் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் 4 நாள் மட்டுமே நடித்த அவர் மீதி நாட்களில் நடிக்க மறுத்து வருவதாகவும், இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த தொகையை நஷ்ட ஈடாக மீட்டுத் தர வேண்டும் அல்லது நடித்து தர உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் ரெடின் கிங்ஸ்லி தரப்பு விளக்கத்தை கேட்டுள்ளனர்.