நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் மற்றும் பலர் நடித்துள்ள சரித்திரப் படம் 'சாகுந்தலம்'. தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இப்படத்தின் வெளியீடு இரண்டு முறை அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டது. அடுத்து ஏப்ரல் 14ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். முதலில் கடந்த வருடம் நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து தள்ளி வைத்தார்கள். அடுத்து இரண்டாவது முறையாக பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து தள்ளி வைத்தார்கள். இப்போது மூன்றாவது முறையாக ஏப்ரல் 14 என்று புதிய தேதியை அறிவித்துள்ளார்கள். இதற்கு மேலும் படத்தைத் தள்ளி வைக்க மாட்டார்கள் என நம்பலாம்.
தெலுங்கில் 'ஒக்கடு' படத்தின் மூலம் பெரும் வெற்றியைக் கொடுத்தவர் இயக்குனர் குணசேகர். அப்படம்தான் தமிழில் விஜய் நடிக்க 'கில்லி' என ரீமேக்கானது. 2015ல் அனுஷ்கா நடித்த 'ருத்ரமாதேவி' என்ற சரித்திரப் படத்தை இயக்கினார் குணசேகர். அடுத்து எட்டு வருடங்களுக்குப் பிறகு 'சாகுந்தலம்' படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.