500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
'பதான்' படம் மூலம் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கும் ஷாரூக்கான் அணிந்த வாட்ச் பற்றிய தகவல் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஷாரூக் அணிந்திருந்த நீல நிற வாட்ச் சுமார் 4 கோடியே 98 லட்சம் என்று சொல்கிறார்கள்.
'ஆடிமார்ஸ் பிகுயெட் ராயல் ஓக் பர்பெச்சுவல் காலண்டர்' என்ற மாடல் வாட்ச் ஆன அதன் விலை 4 கோடியே 98 லட்சம் என்று இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை இறக்குமதி செய்ய மட்டும் 84 ஆயிரம் ரூபாய்க்கு இன்ஷுரன்ஸ் கட்ட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர்களில் தன்னுடைய வாழ்க்கைய மிகவும் 'ரிச்' ஆக அமைத்துக் கொண்டவர்களில் ஷாரூக்கானும் ஒருவர். மும்பையில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு மட்டும் 200 கோடி என்கிறார்கள். அது தவிர டில்லியிலும் அவர் சொந்த வீடு ஒன்று வைத்துள்ளார். பிஎம்டபுள்யு 6 சீரிஸ், பிஎம்டபுள்யு 7 சீரிஸ், ஆடி என விலை உயர்ந்த கார்களையும் வைத்துள்ளார் ஷாரூக்.
ஷாரூக்கான் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம், கோல்கட்டா ஐபிஎல் அணி என ஆகியவற்றின் மூலமும், விளம்பரங்கள் மூலமும் வருடத்திற்கு 240 கோடி வரை சம்பாதிப்பதாகத் தகவல். அவருடைய சொத்துக்களின் மதிப்பு மட்டும் 6000 கோடியாம். இந்தியாவின் பணக்கார ஹீரோக்களில் ஷாரூக்கும் ஒருவர்.